ஐயப்பன் சிலையை தொட்டதாக நாடகம்-ஜெயமாலா ஆஜராக கேரள கோர்ட் உத்தரவு


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்ப சாமி சிலையை தொட்டதாக கூறி நாடகமாடிய விவகாரத்தில் கன்னட நடிகை ஜெயமாலா உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2006ம ஆண்டு பிரபல ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவபிரச்சன்னம் நடந்தது. அப்போது ஐயப்பன் விக்ரத்தை ஒரு பெண் தொட்டு விட்டதால் பரிகார பூஜை செய்ய வேண்டுமென பணிக்கர் கூறினார்.

இதற்கு மறுநாளே கன்னட நடிகை ஜெயமாலா நான்தான் பல ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் விக்ரத்தை தெரியாமல் தொட்டு விட்டேன் என்று கூறினார்.

சபரி்மலைக்கு செல்ல 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐயப்ப விக்கிரத்தை ஜெயமாலா தொட்டதாக கூறியது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் பணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து திட்டமிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

இதையடுத்து பணிக்கர், அவரது உதவியாளர் ரகுபதி, ஜெயமாலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டுமென ஜெயமாலா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ராணி நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் ராணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகை ஜெயமாலா, உன்னி கிருஷ்ண பணிக்கர், ரகுபதி ஆகியோர் இம்மாத இறுதிக்குள் நேரில் ஆஜாராக நீதிபதி உத்தரவிட்டார்.
READ MORE - ஐயப்பன் சிலையை தொட்டதாக நாடகம்-ஜெயமாலா ஆஜராக கேரள கோர்ட் உத்தரவு

"மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து


மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என ஜெயலலிதாவிடம் போனில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் பேசினார் ரஜினி.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதாகவும் அதற்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்றும் அவர் ஜெயலலிதாவிடம் கூறினார்.

தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், அடுத்த மாதம் சென்னை திரும்புவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற ரஜினி, சிறுநீரக பிரச்சினைக்காக கடந்த மே 18-ம் தேதி சிங்கப்பூர் சென்றார். அங்குதான் அவரது நோய்க்கான மூல காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை வேகமாக சீரடைந்தது. இப்போது ரஜினி பூரண நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போன் செய்தார் ரஜினி.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சிங்கப்பூரிலிருந்து நேற்று தொலைபேசியில் பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் முதலில் பேச முடிவு செய்ததது முதல்வருடன்தான் என்று கூறிய ரஜிநி தான் பூரண உடல்நலம் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். ரஜினிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தொலைபேசியில் ரஜினியின் குரலைக் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் முதல்வர் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டதற்காக ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அக்கறையுடன் விசாரித்ததற்கு நன்றிகளையும் கூறினார் ரஜினி.

விரைவில் ரஜினி சென்னை திரும்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அவரை வாழ்த்தியபோது, இன்னும் ஒன்றரை மாதத்தில் சென்னை திரும்புவதாக ரஜினி கூறினார்.

ரஜினியின் மனைவி லதா ரஜினியுடம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
READ MORE - "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து

அருண் விஜய் 'ராசி': கம்பி நீட்டிய பிராச்சி!


'தடையறத் தாக்க' என்று ஒரு படம். அருண் விஜய் ஹீரோ. ஹீரோயினாக மும்பையைச் சேர்ந்த பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். ராக் ஆன், லைஃப் பார்ட்னர் போன்ற இந்திப் படங்களில் நடித்துள்ளார் இந்த பிராச்சி.

இவரை ஏற்கெனவே தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தமிழ் இயக்குநர்கள் முயன்றனர். ஆனால் அப்போதெல்லாம் மறுத்து வந்தவர், அருண் விஜய்யின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். பெரிய சம்பளம் பேசப்பட்டது. அட்வான்ஸையும் வாங்கி பெட்டியில் போட்டுக் கொண்டார்.

சில தினங்களில் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது, அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொந்த ஊரான குஜராத் போனவர்தான். வரவேயில்லை.

அதற்குள் அருண் விஜய் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுறுசுறுப்பாக முடித்துவிட்டார். இரண்டாவது ஷெட்யூலுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் போன் செய்த அருண் விஜய்யின் லைனுக்கே வரவில்லையாம் பிராச்சி. தொடர்ந்து அவர் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின்னர்தான் தெரிந்தாம் பிராச்சி பிரச்சினை செய்யக் காரணம், அருண் விஜய்யின் கேரியர் கிராப் மற்றும் ராசி பற்றி யாரோ புட்டுப் புட்டு வைத்துவிட்டார்களாம் அம்மணியிடம்.

இந்த திருப்பணியைச் செய்தது தமிழ் சினிமாவைச் சேர்ந்த சிலர்தான் என்று தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் புலம்பியபடி, புதிய ஹீரோயின் தேட ஆரம்பித்துள்ளாராம் அருண் விஜய்.
READ MORE - அருண் விஜய் 'ராசி': கம்பி நீட்டிய பிராச்சி!