ஸ்ரீகாந்த் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்ரீகாந்த் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்!
6/8/2011 10:57:59 AM
ஸ்ரீகாந்த்திற்கு தற்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது போல, ஷங்கரின் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் வரும் ஸ்ரீகாந்த்திற்கு அடுத்த பெரிய படங்கள் கிடைத்துள்ளன. தமிழில் 'இதயம்', 'உழவன்', 'காதலர் தினம்', 'காதல் தேசம்', 'காதல் வைரஸ்' படங்களை இயக்கியவர் கதிர். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கும் படம், 'கோடை விடுமுறை'. மீடியா இனிபினிட் வழங்க சவுண்ட் அண்ட் லைட் நிறுவனம் தயாரிக்கும் இதில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். வாலி பாடல்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. அமீர், சேரன், வெற்றிமாறன், ஜனநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
READ MORE - ஸ்ரீகாந்த் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்!

தீபாவளி ரேஸில் நண்பனுடன் போட்டிப் போடப் போவது யாரு?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தீபாவளி ரேஸில் நண்பனுடன் போட்டிப் போடப் போவது யாரு?
6/7/2011 10:42:49 AM
ஷங்கர் கே‌ரிய‌ரில் மிக வேகமாக தயாராகி வரும் நண்பன் தீபாவளி வெளியீடு என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர், ஊட்டி, அந்தமான், ஆம்ஸ்டர்டாம் என்று பறந்து பறந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் ஷங்கர். மிகுந்த பொருட் செலவில் தயாராகும் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடுவது என்பதில் தயா‌ரிப்பாளர் தரப்பு உறுதியாக இருக்கிறது. முக்கியமாக பட வேலைகள் அதற்கு முன் முடிந்துவிடும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. தீபாவளி ரேஸில் நண்பனுடன் போட்டிப் போடப் போவது யாரோ.
READ MORE - தீபாவளி ரேஸில் நண்பனுடன் போட்டிப் போடப் போவது யாரு?

நடிகர் ஷக்திக்கு அக்.31ல் திருமணம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் ஷக்திக்கு அக்.31ல் திருமணம்!
6/8/2011 12:52:35 PM
இயக்குனர் பி.வாசுவின் மூத்த மகன், ஷக்தி. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், 'தொட்டால் பூ மலரும்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்', 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆட்ட நாயகன்' படங்களில் ஹீரோவாக நடித்தார். ஷக்திக்கும், சென்னையை சேர்ந்த ஸ்மிருதிக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சென்னை யில் உள்ள அடையாறு பார்க் ஷெராட்டன் ஓட்டலில், நிச்சயதார்த்தம்  நேற்று காலை நடந்தது. பிரபு, சத்யராஜ், விஜயகுமார், மஞ்சுளா, சிபிராஜ், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஷக்தி  ஸ்மிருதி திருமணம் அக்டோபர் 31ம் தேதி, சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
READ MORE - நடிகர் ஷக்திக்கு அக்.31ல் திருமணம்!

தினமும் ர‌ஜினி நடைப்பயிற்சி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தினமும் ர‌ஜினி நடைப்பயிற்சி!

6/7/2011 11:48:55 AM

சி‌ங்க‌ப்பூ‌ர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் ர‌ஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தனது அறையில் அரை மணி நேரம் தினமும் நடைப்பயிற்சி எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. ர‌ஜினியின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனை சார்பில் மருத்துவர்களோ, ர‌ஜினியின் குடும்பத்தினரோ இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இன்னும் பத்து தினங்கள் ர‌ஜினி மருத்துவமனையில் தங்கியிருப்பார், டிஸ்சார்‌‌ஜ் ஆனாலும் சில வாரங்கள் அவர் சிங்கப்பூ‌ரிலேயே தங்கியிருந்து சிகச்சையும், ஓய்வும் எடுத்துக் கொள்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெ‌ரிவிக்கிறது.

READ MORE - தினமும் ர‌ஜினி நடைப்பயிற்சி!

கிசு கிசு -டான்ஸ் ஆட நடிகை மறுப்பு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

டான்ஸ் ஆட நடிகை மறுப்பு

6/7/2011 2:32:07 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

பாவனை நடிகை, மல்லுவுட்ல நடிக்க¤ற ஒண்ணு ரெண்டு படம் திடீர்ன்னு சக்ஸஸ் ஆகுறதால லைம்லைட்ல இருக்க¤றாராம். மறுபடியும் கோலிவுட்ல கவனத்தை திருப்பியிருக்கிற ஹீரோயின், பல கம்பெனில அப்ரோச் பண்ண¤னதுக்கு பலன் க¤டைச்சிருக்காம்… கிடைச்சிருக்காம்… பஞ்ச் நடிகரோட அடுத்த படத்துல நடிக்க¤றதுக்கான கிரீன் சிக்னல் எரிய ஆரம்பிச்சிருக்காம். இது தெரிஞ்சுகிட்ட டாப் நடிகைங்க சிலரு, அந்த வாய்ப்பை தட்டிப் பறிக்க¤ற முயற்சியில இறங்கியிருக்காங்களாம்… இறங்கியிருக்காங்களாம்…

ஸ்ரீயான பழைய ஹீரோயினை திரும்ப நடிக்க வைக்க தமிழ் இயக்குனருங்க ட்ரை பண்ணினாங்க. நடிகை மறுத்துட்டாரு. அவரோட வாரிசை நடிக்க வைக்கவும் முயற்சி நடந்துச்சு. அதுக்கும் நடிகை ஒத்துக்கல. இப்போ திரும்ப நடிகையோட வாரிசை அறிமுகப்படுத்த, கோலிவுட் டீம் ஒண்ணு தீவிரமா இருக்காங்களாம்… இருக்காங்களாம்… இது சம்பந்தமா நடிகையோட கோலிவுட் நண்பரான கலை குடும்பத்து தலைவரை அணுகி இருக்காங்களாம். அவரோட உதவியை அந்த டீம் எதிர்பார்க்குதாம்… எதிர்பார்க்குதாம்…

சான்டல்வுட்டுக்கு போயிட்டு வந்தும் சானா நடிகைக்கு பலன் கிடைக்கல. இதனால வருத்தமா இருந்தவருக்கு, தமிழ் படத்துல ஒரு பாட்டுக்கு ஆட சான்ஸ் வருதாம்… வருதாம்… நடிச¢சா ஹீரோயின்தான்னு பிடிவாதமா மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்…

READ MORE - கிசு கிசு -டான்ஸ் ஆட நடிகை மறுப்பு

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்!

6/8/2011 3:18:47 PM

தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் அதற்குப் பதில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுமாறும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. வருகிற ஜூன் 22-ம் தேதி இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 22-ம் தேதி வரும் எனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் விமர்சையாக கொண்டாட வேண்டாம். அதற்குப் பதில் ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

READ MORE - என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்!

மம்மூட்டிக்கு வில்லன் ஆனார் பிருத்வி ராஜ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மம்மூட்டிக்கு வில்லன் ஆனார் பிருத்வி ராஜ்

6/8/2011 10:56:36 AM

மம்மூட்டிக்கு வில்லனாக நடிக்கிறார் பிருத்விராஜ். மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள பிருத்விராஜ், தமிழில் 'கனா கண்டேன்' படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால், மலையாளத்தில் வில்லனாக நடிக்க வில்லை. இப்போது, அமல் மீரத் இயக்கும் படத்தில் மம்மூட்டிக்கு வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அமல் மீரத், 'பிக் பி', 'சாகர் அலைஸ் ஜாக்கி', 'அன்வர்' ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர். இது 1950-ல் நடந்த கதை என்று கூறப்படுகிறது. ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.

READ MORE - மம்மூட்டிக்கு வில்லன் ஆனார் பிருத்வி ராஜ்

குப்பத்து சிறுவர்களுக்கு பாண்டிராஜ் நடிப்பு பயிற்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குப்பத்து சிறுவர்களுக்கு பாண்டிராஜ் நடிப்பு பயிற்சி

6/8/2011 11:01:07 AM

குப்பத்து சிறுவர்களுக்கு இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார்.'பசங்க', 'வம்சம்' படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். அடுத்து சென்னையை கதைக் களமாக கொண்ட படத்தை இயக்க இருக்கிறார். இதற்காக சென்னையில் உள்ள குப்பங்களிலிருந்து 12 முதல் 9 வயது வரையிலான 10 சிறுவர்களை தேர்ந்தெடுத்து தினமும் நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அடுத்து இயக்கப் போகும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நகர்புறத்து மக்களின் யதார்த்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கும். இதற்காக சிறுவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறேன். 'பசங்க' போன்று குழந்தைகளின் படமல்ல. அவர்களின் பங்கு ஒரு பகுதி இருக்கும். இதுதவிர கதை நடக்க இருக்கும் சென்னை கடற்கரை, மீனவர் குப்பம், கடற்கரை, துறைமுகம் போன்ற பகுதிகளுக்கு இரவிலும், பகலிலும் உதவியாளர்களுடன் சென்று அங்கு நடப்பவற்றை ஆய்வு செய்து வருகிறேன். அதன் அடிப்படையிலேயே காட்சிகள் அமைக்க இருக்கிறேன்.

READ MORE - குப்பத்து சிறுவர்களுக்கு பாண்டிராஜ் நடிப்பு பயிற்சி

தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பவன் கல்யாண்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பவன் கல்யாண்!

6/8/2011 11:38:43 AM

தமிழ் படத்தில் நடிக்க தற்போது நிறைய தெலுங்கு ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி நடிக்க ஆசைப்பட்ட பட்டியலில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இடம்பெறுகிறார். தமிழில் 'ஏகன்’ படத்தை இயக்கிய ராஜு சுந்தரம் அடுத்து பவன் கல்யாண் நடிக்கும் தமிழ், தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். ஓரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் படம் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

READ MORE - தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பவன் கல்யாண்!

கிசு கிசு -ஹீரோவுக்கு ஹீரோயின் அட்வைஸ்!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ஹீரோவுக்கு ஹீரோயின் அட்வைஸ்!

6/8/2011 11:32:38 AM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

டாப் நடிகைக்கு புதுமுக நடிகர் ஒருவரு பாய்பிரெண்டா கிடைச்சிருக்காராம்… கிடைச்சிருக்காராம்… நடிகரோடு நெருக்கமா பழகுற நடிகை, சினிமா சம்பந்தமா அவருக்கு நிறைய அட்வைஸ் பண்றாராம். முன்னணி இடத்தை பிடிக்க¤றது எப்படி, எந்த ஸ்கிரிப்ட்ல நடிக்கணும், என்ன ஸ்டைல்ல நடிக்கணும்னு நிறைய யோசனை சொல்றாராம்… சொல்றாராம்… ஒவ்வொரு
விஷயத்தையும் நடிகையோடு டிஸ்கஸ் பண்ண¤ன பிறகே நடிகரு முடிவு செய்றாராம்… செய்றாராம்…

வாமன ஜெ ஹீரோ நடிச்ச படங்கள் அவருக்கு கைகொடுக்கல. புதுசா ஸ்கிரிப்ட்டுக்கு காத்திருந்தும் எதுவும் கைகூடி வரலையாம்… வரலையாம்… அதனால இன்ஷியலுக்கு பேர் மாறிய ஹீரோவோடு காதல் நடிகரு நடிச்சமாதிரி, அதே ஹீரோ நடிக்க¤ற ஹன்ட் கிங் படத்துல செகண்ட் ஹீரோவா நடிக்க ஜெ
நடிகரு ஒத்துக்கிட்டாராம்… ஒத்துக்கிட்டாராம்…

காஜலான நடிகையோட இந்தி படம் அடுத்த மாசம் ரிலீசாகுது. படத்துல அவர் நடிக்கிறது பற்றி பாலிவுட் வட்டாரத்துல யாருக்கும் தெரியாதாம்… தெரியாதாம்… பப்ளிசிட்டில ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தர்றாங்களாம். இதனால நடிகை வருத்தமா இருக்காராம்… இருக்காராம்…

READ MORE - கிசு கிசு -ஹீரோவுக்கு ஹீரோயின் அட்வைஸ்!

பாலாவின் இயக்கத்தில் நடிக்க ஆசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலாவின் இயக்கத்தில் நடிக்க ஆசை!

6/7/2011 10:35:01 AM

பாலாவின் அவன் இவன் தெலுங்கில் வாடு வீடூ என்ற பெய‌ரில் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் ‘நான் பாலாவின் ரசிகன்’ என்று கூறினார். படத்தின் ட்ரெய்லரை வெகுவாக புகழ்ந்தார். நல்ல திறமையான இயக்குனர்களைப் பார்த்தால் வாய்ப்பு கேட்க கூச்சப்படாத அல்லு அர்ஜுன் பாலாவின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெ‌ரிவித்தார்.

READ MORE - பாலாவின் இயக்கத்தில் நடிக்க ஆசை!