பாலிவுட்டின் சாதனை நாயகன் தர்மேந்திரா தனது வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார், ஆனால் இந்தியிலோ ஆங்கிலத்திலோ அல்ல, உருது மொழியில்!
இந்தப் புத்தகத்தில், ஒரு நடிகனாக மாற, 23 வயதிலி்ருந்து தான் பட்ட கஷ்டங்களை அவர் விரிவாகவே சொல்லப் போகிறாராம்.
நடிகராக வருவதை லட்சியமாகக் கொண்டு மும்பை வந்த தர்மேந்திரா, நடிப்புத் திறமைக்காக ஒரு பத்திரிகை நடத்திய போட்டியில் வெற்றிபெற்றார். அதன் பிறகும் அவருக்கு ஒரு ஆண்டு வரை வாய்ப்புக் கிடைக்கவில்லையாம். இந்த காலகட்டத்தில் அவர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்.
தான் பட்ட இந்த சிரமங்கள் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதுகிறாராம்.
இந்த புத்தகத்தில் தனது இரு திருமணங்கள், ஹேமமாலினியுடனான காதல், மற்ற நடிகைகளுடன் தன்னை இணைத்துப் பேசப்படக் காரணமாக இருந்தவை பற்றியும் விவரிக்கப் போகிறாராம் இந்த ஷோலே ஹீரோ!
ஹேமமாலினியை திருமணம் செய்து கொள்வதற்காகவே முஸ்லிமாக மாறினார் தர்மேந்திரா என்று சொல்லப்படுவதுண்டு. அதையும் இதில் எழுதுவாரா... பார்க்கலாம்!