'பெப்சி' தொழிலாளர் பிரச்சினை: படப்பிடிப்பு ரத்து


சென்னை: சம்பள உயர்வு கேட்டு பெப்சி தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கியுள்ளதால், நேற்று ஒரு படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.

திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சம்பள உயர்வு பிரச்சினை காரணமாக ஒரு தமிழ் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் பெயர், 'பொன்மாலைப் பொழுது.' கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.சி.துரை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு, பெங்களூரில் நடைபெற்று வந்தது.

திடீரென்று, "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தீர்மானித்துள்ளபடி சம்பள உயர்வு கொடுத்தால்தான் வேலை செய்வோம்'' என்று படப்பிடிப்பில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் கூறியதால், பெங்களூரில் நடைபெற்று வந்த 'பொன்மாலைப்பொழுது' படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினார்கள்.

நாளொன்றுக்கு ரூ 350 முதல் 500 வரை பெற்று வந்த ஊழியர்கள் தற்போது ரூ 2000 சம்பளம் கோரியுள்ளனர்.

 
 
 

Label

Label

Labels