அதிமுக பிரமுகர் மீது புகார் கொடுத்ததால் சோனாவை விசாரிக்கும் போலீஸ்!!


பொதுவாக, யார் மீது தரப்பட்டுள்ளதோ அவரை முதலில் அழைத்து விசாரிப்பதுதான் போலீஸ் நடைமுறை. பின்னர்தான் புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கேட்பார்கள்.

ஆனால் கவர்ச்சி நடிகை சோனா விஷயத்தில் நடப்பது வேறு. காரணம் அவர் புகார் கொடுத்திருப்பது அதிமுக பிரமுகர் மீது! விளைவு, புகார் கொடுத்த சோனாவையே மடக்கி மடக்கி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் புறநகர் போலீஸார்.

அதிமுக பிரமுகரான ராமலிங்கத்துக்கு சொந்தமான கட்டடத்தில் வைத்து தனது மரத் தொழிற்சாலையை நடத்தி வந்தார் நடிகை சோனா. இதற்கு ரூ 7 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.

இப்போது தனது நிறுவனத்தை போரூருக்கு இடம்மாற்றியுள்ளார். இதற்காக முறைப்படி வீட்டு உரிமையாளரான ராமலிங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வாடகை பாக்கியைக் கழித்துக் கொண்ட பிறகு ரூ 4 லட்சம் வரை சோனாவுக்கு ராமலிங்கம் தர வேண்டி வந்தது.

ஆனால் கட்டட பராமரிப்பு செலவு என்று கூறி, முழுத் தொகையையும் அவர் தரமறுத்துவிட்டார். இதற்காகத்தான் சோனா புகார் தந்துள்ளார். ஆரம்பத்தில் இவரது புகாரை போலீஸார் ஏற்கவே மறுத்துவிட்டது தனிக்கதை!

உடனே அவர் கமிஷனர் அலுவலகம் போக, அங்கே, இது புற நகர் லிமிட்டில் வருவதால் அங்கே போய் புகார் கொடுங்கள் என அனுப்பிவிட்டனர்.

"நடிகைதானே... என்ன செய்துவிட முடியும் அவரால்' என்ற ராமலிங்கத்தின் நினைப்பும், ஆளும் கட்சி பிரமுகர் என்ற மிதப்பும் சோனாவை இப்படி வைக்கிறது. இதில் வேறு வில்லங்கங்களும் உள்ளன. அவை இனிமேல்தான் வெளிவரும்," என்கிறார்கள் திரையுலகினர்.

ஆட்சிக்கு வந்து முழுசாக மூன்றுவாரங்கள்தான் ஆகின்றன...அதற்குள் அடிப்பொடிகள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்களா!

 
 
 

Label

Label

Labels